மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் பணி இடைநீக்கம்

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் பணி இடைநீக்கம்

1 mins read
2e8dc55e-ad4d-4650-ae54-05109abab864
கர்நாடகாவில் இந்த மாதத்தில் மட்டும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த மூன்றாவது சம்பவம் இதுவாகும். - கோப்புப்படம்: பிக்சாபே

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாணவிகள் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் காணொளி இணையத்தில் வெளியானதையடுத்து பள்ளி முதல்வர் சங்கரப்பாவை, ஷிவமொக்கா பொதுக்கல்வித்துறை பணி இடைநீக்கம் செய்தது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய தேர்வு செய்ததாக ஒரு தலித் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்குப் பணம் செலவழிக்க முடியாததால் மாணவர்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக பள்ளி முதல்வர், பெற்றோரிடம் கூறியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொதுக்கல்வித்துறை தெரிவித்தது.

கர்நாடகாவில் இந்த மாதத்தில் மட்டும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

குறிப்புச் சொற்கள்