தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட விமானம்

1 mins read
4d83e97a-8636-4442-982a-144f35fd17ba
பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட விமானம் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.  - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலம் மோதிஹாரியில் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட விமானத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் எடுத்துச் சென்றபோது, பாலத்திற்கு அடியில் அந்த விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

விமானத்தை மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் லாரி மீட்கப்பட்டது.

மேம்பாலத்தின் உயரத்தை லாரி ஓட்டுநர் தவறாகக் கணித்ததனால் விமானம் சிக்கிக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்