தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜார்க்கண்ட் முதல்வரை நெருங்கும் அமலாக்கத்துறை

1 mins read
9b310b7d-99b9-45d8-b610-797913572e2c
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 7வது முறையாக அமலாக்கத் துறை சனிக்கிழமை புதிய அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

அதன்பிறகு பல்வேறு வழக்கு விசாரணைகளின்கீழ் அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அப்போது அவா் வரவில்லை.

ஏற்கனவே ஆறுமுறை வராத ஹேமந்த் சோரனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு இது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்