தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த லக்பீர் சிங் தீவிரவாதி என அறிவிப்பு

1 mins read
85c7361f-b424-4c4e-8e32-1c598e815027
கனடாவில் வசிக்கும் சட்டவிரோத கும்பல் தலைவன் லக்பீர் சிங் லண்டா தீவிரவாதி என இந்திய அரசு அறிவித்தது. - படம்: இணையம்

புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், கனடாவில் வசிக்கும் சட்டவிரோத கும்பல் தலைவன் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என இந்திய மத்திய உள் துறை அமைச்சு அறிவித்தது. 

பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த லண்டா, பஞ்சாப் மாநிலம் டார்ன் டார்ன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

குறிப்புச் சொற்கள்