தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவமனை வாசலில் பிரசவம்; சிசு மரணம்

1 mins read
d2d97e6e-195c-4999-b404-f62808bffd8d
படம்: - பிக்சாபே

பதோன்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பதோன் எனும் ஊரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனை வாயிலிலேயே கர்ப்பிணி ஒருவர் மகவை ஈன்றார்.

கட்டணம் செலுத்த அவரிடம் பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த சிசுவும் மாண்டது.

நீலம் எனும் பெயர்கொண்ட அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்ததும் அந்த மருத்துவமனைவரை அழைத்துச் சென்றதாக அவருடைய குடும்பத்தினர் கூறினர்.

ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் ஊழியர்கள் தன் மனைவியை உள்ளேவிட மறுத்தனர் என்றும் நீலத்தின் கணவர் ரவி சொன்னார்.

சம்பவம் குறித்து விசாரணை இடம்பெறுகிறது.

குறிப்புச் சொற்கள்