அதானி நிறுவனத்தின் மீதான நிதி மோசடி வழக்கை விசாரிக்க சிறப்புக்குழு தேவையில்லை

புதுடெல்லி: அதானி குழுமம் எதிர்நோக்கும் நிதிமோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழு தேவையில்லை. அந்த வழக்கை ‘செபி’ எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது இந்த வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரித்து வருகிறது. அதை மாற்றுவதற்கு எந்தவித அடிப்படைக் காரணமும் இல்லை.

எனவே இந்த நிதிமோசடி வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேபோல், 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை செபி முடித்துவிட்டது. மீதமுள்ளள இரண்டு வழக்குகளின் விசாரணையை செபி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

“செபியின் ஒழுங்குமுறை சட்டத்துக்குள் ஒரு குறிப்பிட்ட அளவே உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியும். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஆராய முடியும். ஒழுங்குமுறையை திரும்பப்பெற செபி அமைப்புக்கு உத்தரவிட சரியான காரணங்கள் இல்லை,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி: கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது.

பங்குச் சந்தை மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டது என்றெல்லாம் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் உண்மைத்தன்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் முன்னதாக ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு அதன் ஆய்வு முடிவுகளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!