இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை பகுதியில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்காக அசாம் மாநில அதிகாரிகளும், மணிப்பூர் காவல்துறையினரும் இணைந்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் தொடர்கிறது என்று வந்த உளவு தகவலை அடுத்து இரு மாநில அதிகாரிகளும் சோதனையைத் தீவிரப்படுத்தினர்.
இதில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 1.137 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பிடிபட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

