புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு சிறப்பு சேலை சூரத் நகரில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சேலையில் ராமர் மற்றும் அயோத்தி கோயிலின் படங்கள் இடம்பெற்றுள்ளன. சீதாவுக்கு காணிக்கையாக இந்தச் சேலை அனுப்பி வைக்கப்படுவதாக சூரத் நகர ஜவுளி தொழிற்துறையைச் சேர்ந்த லலித் ஷர்மா ஞாயிற்றுக் கிழமை அன்று தெரிவித்தார். இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் ஹப்லா பீப்லா கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் மத ஆராதனை பாடல்களை பாடுபவரும் கவிஞருமான அக்பர் தாஜ், 42, என்பவருக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், இதனை பெற்று கொண்டதற்காக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அயோத்தி கோயில் சீதா தேவிக்கு சிறப்பு சேலை
1 mins read
சீதா தேவிக்கு காணிக்கையாக சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
குறிப்புச் சொற்கள்

