முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்த உத்திரப்பிரதேச முதல்வர்

முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்த உத்திரப்பிரதேச முதல்வர்

1 mins read
23629577-0b05-4ab4-8551-325c90412305
உத்தரப்பிரதேசத்தில் நடந்த அன்னபிரசன்னம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம் குழந்தைக்கு உணவளித்தார். - படம்: இந்திய ஊடகம்

கோரக்பூர்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்துக்கள் மத்தியில் ஒரு சுப சடங்காக கருதப்படும் பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு முதன்முதலில் திட உணவை ஊட்டும் நிகழ்ச்சி அன்னபிரசன்னம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் நடந்த அன்னபிரசன்ன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது முஸ்லிம் குழந்தைக்கும் அவர் அன்னபிரசன்னம் செய்தார்.

முதல்வரின் கைகளில் தன் குழந்தை இருப்பதைப் பார்த்து அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்தார். குழந்தைக்கு உணவளித்த பிறகு, அந்தக் குழந்தைக்கு அவர் பரிசு வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்
முஸ்லிம்குழந்தை