ராமர் கோயிலுக்காக 30 ஆண்டுகளாக மௌனவிரதம் இருக்கும் பெண்

ராமர் கோயிலுக்காக 30 ஆண்டுகளாக மௌனவிரதம் இருக்கும் பெண்

1 mins read
a4deb1df-dafd-4422-b688-fa5041559c4d
படம்: - தமிழ்முரசு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தேவி எனும் 85 வயது பெண் முப்பது ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ளார். அதற்கான காரணம்தான் நம்மை வியக்கவைக்கிறது.

1986ல் கணவனை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டார். 1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தையான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

2020 வரை தினமும் 23 மணிநேரம் மௌனவிரதமும் மதியம் 1 மணிநேரம் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மௌனவிரதம் இருந்துள்ளார்.

சரஸ்வதி கடந்த திங்கட்கிழமை இரவு அயோத்திக்கு தன் பயணத்தைத் தொடங்கியதாகவும் ஜனவரி 22ல் தனது மௌன விரதத்தை அவர் முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் சரஸ்வதியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்