குஜராத்தில் கெளதம் அதானி ரூ.2 லட்சம் கோடி முதலீடு

1 mins read
72fdce7e-2a5e-43eb-87a7-209c31b84e18
தொழிலதிபா் கெளதம் அதானி.   - படம்: ஊடகம்

புதுடெல்லி: குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழிலதிபா் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசிய அவா், “அதானி குழுமம் குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.

“இதன்மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

“குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கவ்தாவில் 725 சதுர கி.மீ. பரப்பில், உலகின் மிகப் பெரிய பசுமை எரிசக்தி பூங்காவைக் கட்டும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

“இதன் மூலம் 30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படும்.

“முந்தைய மாநாட்டில் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.55,000 கோடிக்கு முதலீடு செய்ய இலக்கு நிா்ணயித்திருந்த நிலையில், தற்போது வரை ரூ.50,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றாா்.

குறிப்புச் சொற்கள்