புதுச்சேரி: புதுச்சேரிக்கு 4.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திர வாலிபர்கள் நால்வரைக் காவலர்கள் கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த திருவண்டார்கோவில் பகுதியில் கஞ்சா விற்று வந்த ஆனந்தன், 25, அருள் (எ) அன்புச்செழியன், 24, ஆர்தஷ், 34, ஆகிய மூவரை இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்த காவலர்கள் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஆந்திராவில் இருந்து ஒரு சிலர் புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்து கொடுத்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை கொண்டு வந்து கொடுப்பவர்களைப் பிடிக்க திட்டமிட்ட காவலர்கள், கைது செய்யப்பட்டவர்கள் மூலம் கஞ்சா விநியோகிப்பவர்களை வரவழைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கஞ்சாவுடன் வந்த ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த அன்டாகுன்டா நவீன்குமார், 28, காயார்பூ சதிஷ், 31; ஷாகித் பப்ளு, 22; அரவா ஜேம்ஸ், 21, ஆகியோரை நெட்டப்பாக்கம் காவல் ஆணையர் கீர்த்தி வர்மன் தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.

