தடையை மீறி நடத்தப்படும் சேவல் பந்தயங்கள்

தடையை மீறி நடத்தப்படும் சேவல் பந்தயங்கள்

1 mins read
dfe4f21a-5cc8-4c7a-8c3f-c0d73bab35c9
ஆந்திராவில் காவல்துறையின் தடையை மீறி சேவல் பந்தயங்கள் நடத்த பந்தய நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

காக்கிநாடா: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடப்பது போன்று, ஆந்திராவின் கிருஷ்ணா, விசாகப்பட்டினம், கோதாவரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வோர் ஆண்டும் சேவல் பந்தயங்கள் நடத்தப்படும்.

இதில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் லட்சக் கணக்கில் பணம், விலையுர்ந்த கார்கள், நிலப்பட்டாக்களை பந்தயங்களாக வைத்து ஆடுவது வழக்கம். இதனைக் காண பல கிராம மக்கள் திரண்டு வந்து இரவு, பகலாக அங்கேயே தங்கி பொங்கல் பண்டிகையை சிறப்பாக்குவார்கள்.

சேவல் பந்தயம் நடத்த ஆந்திர காவல்துறை தடை விதித்தது. பந்தயம் நடத்தப்படும் 13 இடங்களை கண்டறிந்து அவற்றை டிராக்டரால் உழுது விட்டனர்.

ஆனாலும், தடையை மீறி வேறு இடங்களில் நிலத்தை சமன் செய்து, கூரைகள் அமைத்து, தற்காலிகமாக குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து, சேவல் பந்தயங்கள் நடத்த பந்தயம் நடத்தும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்