தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் விளையாடியபோது இளையர் மரணம்

1 mins read
b41a786b-a5c4-4c8b-aa12-54f32a5b1366
கிரிக்கெட் விளையாடிய பிகாஷ் கர் திடீரெனச் சாய்ந்தார். - கோப்புப் படம்: ஊடகம்

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிய இளையர் ஒருவர் உயிரிழந்தது அவ்வட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பைசிங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனாத்ரி பகுதியை சேர்ந்த பிகாஷ் கர், வயது 28, மனாத்ரி மினி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் உடனே சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடன் விளையாடியவர்கள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருந்தாலும் அவர் பிழைக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவருடைய மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அவரது உடல், உள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கிரிக்கெட்விபத்து