கொச்சியில் ரூ.4,000 கோடி செலவில் கப்பல் துறை திறப்பு

கொச்சியில் ரூ.4,000 கோடி செலவில் கப்பல் துறை திறப்பு

2 mins read
குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு; நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமண விழாவிலும் பங்கேற்பு
7a8be902-0494-4783-b783-707023fa68b9
குருவாயூர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி, கோயிலுக்கு நெய், தாமரை மலர்களைக் காணிக்கையாக அளித்தார். - படம்: பிரதமர் நரேந்திர மோடி/எக்ஸ்
multi-img1 of 2

திரிச்சூர்: கேரள மாநிலம், கொச்சியின் வில்லிங்டன் தீவில் ஏறக்குறைய ரூ.4,000 கோடி செலவில் கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தின் அனைத்துலக கப்பல் பழுதுபார்ப்பு மையத்தையும் புதிய கப்பல்துறையையும் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி அவற்றை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இரு நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை காலை (ஜனவரி 17) திரிச்சூர் மாவட்டம், குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர், அதே கோவிலில் நடைபெற்ற முன்னாள் பாஜக எம்பியான நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு பூங்கொத்துகள் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்டின் அனைத்துலக கப்பல் பழுதுபார்ப்பு மையத்தையும் புதிய கப்பல்துறையையும் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.

இதன்மூலம், கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதன் விற்பனையை இரட்டிப்பாக்கும் என்றும் ரூ.7,000 கோடி வரை வருவாய் கிட்டும் என்றும் அம்மாநில அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் துறை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, “இன்று இந்தியா உலக வர்த்தக மையமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், ​நாம் நமது கடல் சக்தியை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்கு உயரும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

“நாட்டில் மிகப்பெரிய கப்பல்துறை இங்கு உள்ளது. இத்துடன், கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, இறக்குமதி முனையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்காக உயரும்,” என மேலும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்