டெல்லி: ஓட்டலில் 15 நாள்கள் தங்கிவிட்டு பணம் செலுத்த மறுத்த பெண் கைது

டெல்லி: ஓட்டலில் 15 நாள்கள் தங்கிவிட்டு பணம் செலுத்த மறுத்த பெண் கைது

1 mins read
82102195-2dda-4c29-9a33-e1f7476e7e8e
டெல்லி ஹோட்டலில் பதினைந்து நாள்கள் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஓட்டம் பிடிக்கவிருந்த பெண் கைதானார். - கோப்புப்படம்

புதுடெல்லி: புதுடெல்லியின் ஏரோசிட்டி பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்சி ராணி சாமுவேல் (37), என்ற பெண் அறை எடுத்து தங்கியுள்ளார். பதினைந்து நாள்கள் தங்கிய அவர், அறைக்கான கட்டணத்தைச் செலுத்தவில்லை.

இதுகுறித்து கேள்வி ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றார். அத்துடன் அங்கிருந்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்க முயன்றார். அப்போது ஹோட்டல் ஊழியர்களை அந்தப் பெண்ணைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்