தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூடியூப்பில் 100 பேர் வேலை இழந்தனர்

1 mins read
0ce6a198-9b3d-43f0-9878-129b6bccf231
கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வேலையிலிருந்து நீக்கிய கூகல், மேலும் 100 பேரை அட்குறைப்பு செய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கூகல் நிறுவனத்தின் ஓர் அங்கமான யூடியூப் பிரிவில் 100 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது.

இந்த நிலையில் மேலும் வேலை நீக்கம் தொடரும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஊழியர்களிடையே அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.

சில பகுதிகளில் நடைமுறைகளை எளிதாக்கவும் செயல்பாடுகளை அதிகரிக்கவும் வேலை நீக்கம் இடம்பெறுகிறது என்று அந்த குறிப்பில் திரு பிச்சை குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இவ்வாண்டு ஆட்குறைப்பு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்ஃபாபெட்டுக்குச் சொந்தமான கூகல், வேலைப் பளுவைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வேலை நீக்கம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

“தற்போதைய ஆட்குறைப்பு கடந்த ஆண்டுபோல் இருக்காது. எல்லாப் பிரிவுகளும் பாதிக்காது,” என்று திரு பிச்சை குறிப்பில் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு கூகல் நிறுவனம் 12,000 பேரை வேலையிலிருந்து நீக்கியது.

குறிப்புச் சொற்கள்