கோல்கத்தா: கோல்கத்தாவில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வீடுகளைக் கட்டிய உரிமையாளர் அதனை பல்வேறு தனியார் வங்கிகளில் விற்பனை செய்வது போல நடித்து கடன் பெற்று மோசடி செய்துள்ளதும், 6 வீடுகளை 125 முறை பத்திரப்பதிவு செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு இறுதிவரை நடந்துள்ளது. இதில் தொடர்புடைய ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தனியார் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டை விற்பவர் போலவும், சிலர், அந்த வீட்டை வாங்குவது போலவும் நடித்து, போலியான ஆவணங்களைக் காட்டி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பறியும் துறையின் வங்கி மோசடிப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த பத்திரப்பதிவு, வீட்டுக்கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

