அமலாக்கத்துறை விசாரணை அழைப்பை 4வது முறையாக நிராகரித்தார் கெஜ்ரிவால்

1 mins read
e23f1e5d-e0fd-451e-92da-cb95a76bf689
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு டெல்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை மூன்று கடிதம் எழுதியும் அவர் அவற்றை நிராகரித்துவிட்டார்.

இப்போது நான்காவது முறையாக அவருக்குக் கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்தக் கடிதத்தையும் அவர் நிராகரித்து விட்டார்.

இதுபோன்று அமலாக்கத்துறை நடந்துகொள்வது அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறி முதல்வர் கெஜ்ரிவால் அதை நிராகரித்துவிட்டார்.

மேலும், அமலாக்கத்துறை என்னை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கோருவது சட்ட விரோதமானது என்று கெஜ்ரிவால் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்