குஜராத் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது

குஜராத் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது

1 mins read
0cf8ee12-6af4-4f61-8427-277abcff9fb5
கோப்புப்படம்: - தமிழ் முரசு

காந்திநகர்: குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எல்லையோரப் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் (பிஎஸ்எஃப்) கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் மனநிலை சரியில்லாதவா் என்பதும், தன்னை யாா் என்று தெரிவிக்கும் நிலையில் அவா் இல்லை என்பதும் தெரியவந்தது. அவரது உடைமைகளை பரிசோதனை செய்ததில் சந்தேகமளிக்கும் வகையில் எதுவும் சிக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு எல்லையில் பாதுகாப்புப் படையினா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

குறிப்புச் சொற்கள்