ஆந்திராவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு

ஆந்திராவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு

1 mins read
2a8bdb75-dd8a-4acc-86f6-9a5653fa1c7b
விஜயவாடாவில் உள்ள சுவராஜ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை. - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள சுவராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் ஆகப் பெரிய அம்பேத்கர் சிலை என்று கூறப்படுகிறது.

இந்தச்சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சுமிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே வருகையாளர்களை ஈர்க்கும் வகையில் வண்ண வண்ண பூச்செடிகளைக் கொண்ட கண்கவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த மைதானத்தில் குட்டித் திரையரங்கு, அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஜனவரி 19ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

உலகில் உள்ள உயரமான 50 சிலைகளில் விஜயவாடாவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையும் ஒன்று கூறப்படுகிறது. இந்தச் சிலை 400 டன் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்