இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில்தான் உள்ளது: ராகுல் காந்தி

1 mins read
c7403f0b-7595-4fb8-a029-d337d7c787f3
படம்: - இந்திய ஊடகம்

கவுகாத்தி: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். யாத்திரையின் 5வது நாளான வியாழக்கிழமை நாகாலாந்தின் துலியில் இருந்து அசாமின் ஜோர்ஹாட் வரை நடைப்பயணம் தொடங்கியது. அசாமில் உள்ள சிவசாகரில் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைந்தது.

அப்போது அங்குள்ள மக்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறுகையில், “பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அநீதி செய்து வருகின்றன. மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமர் மோடி இன்று வரை அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி அசாமில்தான் நடக்கிறது. நாகாலாந்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அசாமிலும் அதேபோல் வரவேற்பை பெறுவோம் என நம்புகிறேன். ராகுல் காந்தி எப்போது வருவார் என மக்கள் காத்திருக்கிறார்கள்.

“இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம். எங்கள் கட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறது. பாஜகவினர் தங்களை, சங்கராச்சாரியார்களை விட அதிக அறிவுடையவர்களாக கருதுகின்றனர். அந்தளவுக்கு பாஜகவினரிடம் தற்பெருமை குணம் நிறைந்துள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்