நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

1 mins read
2b2903a2-4b0a-4c28-abd2-a78a3b2b486e
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: நீட், ஜே.இ.இ. பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. 16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்தவர்களையே நீட் பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது. குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்