புதுடெல்லி: எதிர்வரும் 75வது இந்திய குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் மேஜர் பிளேஸ், கேப்டன் சுப்ரிதா தம்பதியர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வரலாற்றில் வெவ்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த தம்பதியர் இவ்வாறு அணிவகுப்பில் பங்கேற்பது இதுவே முதல் முறை.
தமிழகத்தின் நீலகிரியைச் சேர்ந்தவர் மேஜர் பிளேஸ், கர்நாடகாவைச் சேர்ந்தவர் கேப்டன் சுப்ரிதா. கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது டில்லியில் பணியாற்றி வருகின்றனர்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது தற்செயலான நிகழ்வு. இந்த வாய்ப்பை மிகப் பெருமையாகக் கருதுகிறோம் என்று கேப்டன் சுப்ரிதா தெரிவித்துள்ளார்.

