சபரிமலை: இளம் பெண்கள் வழிபாடு; காவல்துறை மறுப்பு

சபரிமலை: இளம் பெண்கள் வழிபாடு; காவல்துறை மறுப்பு

1 mins read
0ee55c6c-e51e-4bd9-82f1-c610b1c01a4f
சபரிமலை குறித்து புது சர்ச்சை வெடித்துள்ளது. - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மீண்டும் இளம் பெண்கள் வழிபாடு நடத்தியதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என கேரள காவல் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மீண்டும் இரண்டு இளம் பெண்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் மேற்கொண்டதாகவும், 18ம் படி அருகே நின்று செல்ஃபி படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இன்ஸ்டகிராமில் புகைப்படமும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தகவலும், புகை படங்களும் பொய்யானவை என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சபரிமலையில் நடப்பாண்டு 357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்