தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ரூ.10,000 கோடி தேவை

1 mins read
dadb6f35-3bf3-4fe6-b385-c2d2e42dd9e2
இந்திய தேர்தல் ஆணையம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்குவது, பராமரிப்பது உள்ளிட்ட செலவுகளுக்கு இந்தத் தொகை தேவைப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சமயத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக ஆராய முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்து தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்