ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் இந்தியா வருகை

ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் இந்தியா வருகை

1 mins read
dcb3da16-2788-474e-ad93-3766c4f85e1f
ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் இந்தியப் பயணத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஐநா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஐந்து நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

ஜனவரி 22 (இன்று) தொடங்கி, வரும் 26ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் டென்னிஸ் பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவர், மும்பை, ஜெய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் வளரும் நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. டென்னிஸ் பிரான்சிஸ், அமைச்சர் ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பின்போது இதுகுறித்து இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்