கடும் எதிர்ப்பால் அரைநாள் விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்ற எய்ம்ஸ்

1 mins read
5ced7b15-cdb0-4b1a-94ae-9cec3b335267
எய்ம்ஸ் மருத்துவமனை. - படம்: இணையம்

புதுடெல்லி: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி,டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கட்கிழமை மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை அறிவித்தது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான பணிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எய்ம்ஸ் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ்,சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அதையடுத்து, முந்தைய முடிவை மருத்துவ நிர்வாகம் திரும்ப பெற்றது. மருத்துவமனை வழக்கம்போல் செயல்பட்டது.

குறிப்புச் சொற்கள்