தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவில் சந்திரயான்-3 இறங்குகலத்தைத் தொடா்புகொண்ட நாசா விண்கலம்

1 mins read
ebae6326-6355-418e-ab51-a88c35888b2c
இஸ்ரோவின் சந்திரயான்-3 விக்ரம் இறங்குகலத்துடன் தொடர்புகொண்டதாக நாசா தெரிவித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் இறங்குகலத்தை நிலவைச் சுற்றிவந்தபடி ஆய்வு செய்துகொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் தொடா்புகொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

அதில் இடம்பெற்றிருந்த விக்ரம் இறங்குகலமும், பிரக்யான் ரோவரும் திட்டமிட்டபடி 14 நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.

பின்னா், நிலவில் சூரியன் மறைந்ததால், விக்ரம் இறங்குகலம், ரோவா் ஆகியவை உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. சூரிய ஒளி மீண்டும் வந்த பின்னா் அவற்றை மீண்டும் தொடா்புகொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், நிலவை சுற்றிவந்தபடி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் ஆா்பிட்டா் (எல்ஆா்ஓ), சந்திரயான்-3-இன் விக்ரம் இறங்குகலத்தைத் தொடா்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்