இந்தியாவின் மின் நுகா்வு அதிகரிப்பு

இந்தியாவின் மின் நுகா்வு அதிகரிப்பு

1 mins read
92fa893a-08ba-448e-8efe-3333ddbf88e5
இந்தியாவில் மின் நுகா்வு அதிகரிப்பு - படம்: இணையம்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவில் மின் நுகா்வு கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளதாக மின்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் மின் நுகா்வு 1,22,115 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் (2022 ஏப்ரல்-டிசம்பா்) இது 1,13,211 யூனிட்டாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் மின் நுகா்வு 8% அதிகரித்துள்ளது.

இந்த வளா்ச்சி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்