பாதுகாப்பை மீறி கோயிலுக்குள் நுழைந்த மக்கள் கூட்டம்; திருட்டு அதிகம் என புகார்

பாதுகாப்பை மீறி கோயிலுக்குள் நுழைந்த மக்கள் கூட்டம்; திருட்டு அதிகம் என புகார்

1 mins read
c179f6b9-0909-4ff9-adb8-41a25eca2d6a
அயோத்தி ஸ்ரீபால ராமரை தரிசிக்க பக்தர்கள் திரண்ட நிலையில், காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் பலரும், பக்தர்களிடமிருந்த கைப்பேசி, பணம், நகை, விலையுயர்ந்த பொருட்களைத் திருடியதாக புகார்கள் குவிந்துள்ளன. - படம்: இந்திய ஊடகம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை மீறி அடித்துப் பிடித்துக்கொண்டு பக்தர்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.

காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிக்-பாக்கெட் திருடர்கள், பக்தர்களிடமிருந்த கைப்பேசி, பணம், நகை, விலையுயர்ந்த பொருட்களைத் திருடிவிட்டதாகப் புகார்கள் குவிந்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயது பாலகனாக அருள் பாலிக்கும் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை அடுத்து, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனத்துக்காக செவ்வாய்க்கிழமை கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தை ராமரை தரிசிக்க முண்டியடித்துக் கொண்டு குவிந்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அத்துமீறி உள்ளே நுழையாத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், கூட்ட மிகுதியால், தடுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்