தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத் தேர்தல்: 96 கோடி தகுதி பெற்ற வாக்காளர்கள்; 47 கோடி பேர் பெண்கள்

1 mins read
906ac060-563a-4fc8-9c6e-dcfd2632bcf5
தேர்தல் ஆணையம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 96 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியிடப்பட வாய்ப்புள்ள நிலையில், மொத்த வாக்காளர்களில் சுமார் 1.73 கோடி பேர் இளையோர் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மே மாத இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். எனவே தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், மொத்த வாக்காளர்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தற்போது மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கு மேற்பட்டோர் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 47 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 91.20 கோடி ஆக இருந்தது.

இம்முறை நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1.5 கோடிக்கு அதிகமான பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அனைத்து ஏற்பாடு களும் கிட்டத்தட்ட செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்