பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி தாலுகாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பள்ளிப்பேருந்தில் வீடு மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிப்பேருந்து அழகூருக்கு அருகே வந்துகொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதால் விபத்துக்குள்ளானது.
திங்கட்கிழமை அதிகாலை நடந்த இந்த விபத்தில் நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில், ஸ்வேதா பாட்டீல் (11), கோவிந்த சதாசிவ ஜம்பகி (11), பசவராஜா சதாசிவ கோடகி (15), சாகர் குருலிங்க கடகோலா (16) ஆகிய நான்கு மாணவர்கள் உயிரிழந்து தெரியவந்தது.
விபத்தில் சிக்கிய மாணவர்கள் அழகூரில் உள்ள வர்த்தமானா கல்வி நிலையத்தில் படித்து வந்தனர். இந்த விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பாகல்கோட் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

