புதுடெல்லி: வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நிலவும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகளவு பனிமூட்டம் நிலவுகிறது. ஜனவரி 30 அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாக இருந்தது.
அடர்த்தியான பனிமூட்டத்தால் எதிரில் வருவர்களைக்கூட காண முடியவில்லை.
இந்த நிலையில் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 108 விமானங்கள் தாமதமாக தரை இறங்கியது.
விமான நிலையத்தில் அவர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தனர்.
டெல்லிக்கு வரும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. மும்பை ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக டெல்லி சென்று சேர்ந்தன.

