ராமர் விழாவில் பங்கேற்ற முஸ்லிம் மதகுருவுக்கு மிரட்டல்

1 mins read
a48c3925-0dd6-4267-9397-d84932f7558d
மனித நேயம் முக்கியம் என்று அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முஸ்லிம் மதகுருவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி நடந்த விழாவில் கலந்துகொள்ள அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து விழாவில் அவர் பங்கேற்றார்.

அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக பத்வா பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய உமர் அகமது இலியாசி, ஞாயிற்றுக்கிழமை அன்று பத்வா பிறப்பிக்கப்பட்டது. ஆனால் விழா முடிந்த மாலையிலிருந்து தொடர்ந்து தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

“என்னையும் நாட்டையும் நேசிப்பவர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்,” என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

தமக்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், வெறுப்புக்கான சூழலை ஒரு கும்பல் உருவாக்க முயற்சித்து வருவதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்