சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

1 mins read
3498dd2f-9307-4883-ad90-44c276b75339
பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்:  பஞ்சாப் மாநில சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் மாநகர மேயர் தேர்தல் ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பாஜக வேட்பாளரை எதிர்த்து இண்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

பாரதிய ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 12 வாக்குகளைப் பெற்றார்.

இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி முதல்முறையாக இணைந்து போட்டியிட்டன.

குறிப்புச் சொற்கள்