கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்

கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்

1 mins read
10f65a49-f60d-41d1-8b84-0e134a0efe06
பெண் ஊழியர்கள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு, கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளில் தகுதியான ஒருவரை குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கான வாரிசுதாரராக நியமிக்கலாம்.

இதுகுறித்து தங்கள் துறைத்தலைவரிடம் அவர்கள் எழுத்துமூலமாக எழுதி தர வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் இடம்பெறுகிறது.

கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒருவேளை அவரது பிள்ளை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில், கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அந்தப் பிள்ளை, ‘மேஜர்’ ஆன பிறகு, பிள்ளைக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்.

மரணம் அடைந்த பெண் ஊழியரின் பிள்ளை, தகுதிநிலையை எட்டாவிட்டாலும், பிள்ளைக்கே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்