தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல்

1 mins read
e513447f-25db-4d59-aecd-4ec4edd7837c
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் ஏறக்குறைய 13 மணி நேரம் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நில மோசடி தொடர்பான வழக்கில் கடந்த வாரம் முதல்முறையாக வீட்டிலேயே ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜனவரி 29, 31 ஆகிய தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை ஆணை அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், சொந்த வேலையாக ஜார்க்கண்ட் முதல்வர் தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்