தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இண்டியா கூட்டணியிலிருந்து விலகியது குறித்து நிதிஷ் குமார் விளக்கம்

1 mins read
c7426582-9d5f-4e86-bffe-1132172b8d0f
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். - படம்: ஊடகம்

பாட்னா: பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பீகாா் முதல்வா் நிதிஷ் குமாா், அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். 

தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகாரின் முதல்வராக இருக்கிறார்.

இண்டியா கூட்டணியிலிருந்து விலகியது குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

“தொகுதிப் பங்கீடு சிக்கல்தான் இண்டியா கூட்டணியிலிருந்து விலகியதற்கு முக்கிய காரணம்,” என்றார் நிதிஷ். 

“கூட்டணிக்கு வேறு பெயரைத் தேர்வு செய்ய நான் வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் இண்டியா என்ற பெயரைத் தான் முடிவு செய்தனர். கூட்டணியில் என் பேச்சை நிராகரித்தனர். என் பேச்சுக்கு மதிப்பளிக்கவில்லை,” என அவர் மேலும் கூறினார்.

“எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அவர்கள் இதுவரை முடிவு செய்யவில்லை. இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் நான் கூட்டணியிலிருந்து வெளியேறினேன்,” எனக் கூறி கூட்டணியிலிருந்து விலகியதற்கான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் பீகாருக்குள் நுழைந்தது. புர்னியா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் பேசும்போது, ‘‘பீகாரில் மக்களுக்கு சமூக நீதி அளிக்கும் பொறுப்பை இண்டியா கூட்டணி ஏற்றுள்ளது. இந்த அணிக்கு நிதிஷ்குமார் தேவையில்லை,” எனக் கூறி அவர் நிதிஷ் குமாரை சாடினார்.

குறிப்புச் சொற்கள்