தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும்பனியில் விரையும் காஷ்மீர் ரயில்

1 mins read
10e37097-0c6a-49d1-9891-d53c4def6689
இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளி பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. - படம்: எக்ஸ் தளக் காணொளி

புதுடெல்லி: இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கிடையே செல்லும் ரயில் ஒன்றின் கண்கவர் காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா-பானிஹல் பகுதியில் அந்த ரயில் செல்வதாக தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியுடன், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு’ என்ற சொற்றொடரையும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் பதிவிட்ட காணொளி, பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 9 மணி (சிங்கப்பூர் நேரம்) நிலவரப்படி 330 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருந்தது.

‘மனமயக்கும் காணொளி’, ‘சுவிட்சர்லாந்தில் இருப்பதைப்போல் காணப்படுகிறது’, ‘காஷ்மீரில் பனிமூடிய ரயில் பயணம், இந்தியாவின் சுவிட்சர்லாந்தில் ரயில் பயணம்’ என்றெல்லாம் இணையவாசிகள் கருத்துரைத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்