தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பசுவுடன் விளையாடும் பாப்பா

1 mins read
381bb99a-37fd-413a-98d9-b9941c78f922
படம்: - இன்ஸ்டகிராம் காணொளி

பன்னெடுங் காலமாகவே விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு நம்மில் பலரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையில் நிலவும் அப்பழுக்கற்ற அன்பு, மனங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதில் மிகையில்லை.

இந்த வகையில், அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட காணொளி ஒன்று பல்லாயிரக்கணக்கான விருப்பக் குறியீடுகளைப் பெற்றுள்ளது.

View post on Instagram
 

மரத்தடியில் உள்ள கட்டிலின்மேல் அமர்ந்திருக்கும் அழகிய பெண் குழந்தையுடன் அன்போடு விளையாடும் பசுவை அக்காணொளி காட்டுகிறது.

அந்தக் குழந்தைக்கும் பசுவிற்கும் இடையிலான உறவு அழகானது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்