தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட் சிகரத்தின் 360 டிகிரி கோணக் காணொளி

1 mins read
9a74dbeb-98f9-46bc-b835-513f2aedc534
படம்: - எக்ஸ் தளக் காணொளி

இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் உலகின் ஆக உயரமானது என்ற பெருமைக்கு உரியது.

அதன் உச்சியை எட்டுவது மலையேறிகள் பலருக்கும் உள்ள கனவு என்றால் மிகையில்லை.

கடும் சவால்கள் நிறைந்த அந்தப் பயணத்தில் வெற்றிபெற்ற ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் தன்னைச் சுற்றி முழுவட்டமாகத் திரும்பிப் பார்த்து மகிழ இயலுமா, அந்த மகிழ்ச்சியைப் பிறரிடம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா என்பதெல்லாம் அவ்வாறு மலையேறியவர்களுக்கே வெளிச்சம்.

அண்மையில் எவரெஸ்ட் உச்சியில் இருந்து 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலேயேறிகள் குழுவினரையும் அவர்களைச் சுற்றிலும் பனி மூடிய சிகரங்களையும் காட்டுகிறது அக்காணொளி. பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணி (சிங்கப்பூர் நேரம்) நிலவரப்படி 35.6 மில்லியன் பார்வைகளை அக்காணொளி பெற்றிருந்தது.

குறிப்புச் சொற்கள்