பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் மற்ற நடிகைகளைப் போலவே நடிப்பைத் தாண்டி புதிய முயற்சியாக உணவகத் தொழிலில் கால் பதித்துள்ளார்.
நடிப்பின் மூலம் தான் சம்பாதித்த பணத்தை ‘சிஹா லோகா’ என்கிற தொழிலில் முதலீடு செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உணவகத் தொழிலைத் தொடங்கி உள்ள அவர், தனது உணவகத்தில் பலவிதமாக தயாரிக்கப்பட்ட ‘வெரைட்டி’ சாப்பாடுகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது, ஒரு சாப்பாட்டுக்கு ரூ.1,000 செலுத்தினால் தனது உணவகத்தில் உள்ள அனைத்து உணவுகளையும் வருகையாளர்கள் தங்களது விருப்பப்படி (unlimited) தொடர்ந்து உண்ணமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

