தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சபரிமலை அருகே விமான நிலையம்: பினராயி விஜயன்

1 mins read
ac646927-db93-4a9f-94bf-aecaab870e43
எருமேலியை அடுத்த மணிமலா கிராமத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக எருமேலியை அடுத்த மணிமலா கிராமத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை கேரள சட்டசபையில் அம்மாநில முதல் அமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார். விமான நிலையத்துக்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு மத்திய அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாகவும் விஜயன் கூறினார்.

அனுமதி கிடைத்த பின் விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்