மூன்று சிறுமிகளை மிரட்டிச் சீரழித்த ஆடவர் கைது

மூன்று சிறுமிகளை மிரட்டிச் சீரழித்த ஆடவர் கைது

1 mins read
375d4c7a-1441-4e2f-b26a-fa1b31a58658
யோவான். - படம்: ஊடகம்

சென்னை: பள்ளிச் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளையரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

அண்மையில் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

ஏழு முதல் பத்து வயதுடைய மூன்று சிறுமிகளை யாரோ ஓர் அடையாளம் தெரியாத ஆடவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருப்பதாக அவரது மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் புகார் அளித்தவரின் மகளும் இந்தக் கொடுமைக்கு ஆளாகியிருந்தார்.

மூன்று சிறுமிகளுக்கும் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த ஆடவர். பின்னர் அங்குள்ள மொட்டை மாடியில் அச்சிறுமிகளை அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறை தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வந்த நிலையில் அந்த ஆடவரின் பெயர் யோவான் என்பதும் 30 வயதான அவர் பெற்றோரை இழந்த பின்னர் தனிமையில் வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் கூலி வேலை செய்து வந்த யோவான், பாதிக்கப்பட்ட சிறுமிகளைக் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமிகள் அச்சத்தில் வாய் திறக்கவில்லை. யோவானிடம் விசாரணை நீடிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்