இரவில் திடீரென சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டடம்

இரவில் திடீரென சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டடம்

1 mins read
ebf03eb0-dc36-4885-ad66-81ab3c4d0eb5
படம்: - தமிழ்முரசு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தோர்நாலாவில் இருந்த தனியார் தங்குவிடுதி ஒன்றின் மூன்று மாடி கட்டடம் ஒன்று சனிக்கிழமை இரவு திடீரென்று சரிந்து விழுந்தது.

சரிந்து விழுந்த கட்டடம் அருகே புதிதாக கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் தங்கு விடுதி கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. எனவே தங்கு விடுதியின் உரிமையாளர் அங்கு யாரையும் தங்க விடாமல் அதை காலியாக வைத்திருந்தார்.

 இந்நிலையில் அந்த மூன்று மாடி கட்டடம் ஒட்டுமொத்தமாக திடீரென சனிக்கிழமை சரிந்து விழுந்தது. பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மூன்று மாடி கட்டடம் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்