நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை

நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை

1 mins read
3d169e97-aaeb-43ff-9301-1463b1895aa2
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு முன்னிலையாகாமல் அதைப் புறக்கணித்தார்.

இச்சூழலில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தவுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்