தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டெடுப்பு

1 mins read
91b60863-86d5-454e-b2d8-3d61cdac52bf
செப்பேடு. - படம்: ஊடகம்

திண்டுக்கல்: பழனியில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செப்பேடு ஏறத்தாழ மூன்று கிலோ எடையும் 49 செ.மீ. உயரமும் 30 செ.மீ. அகலமும் உடையது என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செப்பேட்டில் 518 பேரின் கையொப்பம் காணப்படுகிறது.

மேலும், 239 வரிகளில் முக்கியமான தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்