சிறுமிகளுக்குத் திருமணம்: ஏழு பேர் கைது

சிறுமிகளுக்குத் திருமணம்: ஏழு பேர் கைது

1 mins read
b55083c4-95fd-4907-8718-8914bddc62e5
குழந்தை திருமணங்களைத் தடுக்க பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

நெல்லை: நெல்லையில் பதினெட்டு வயதுகூட நிரம்பாத சிறுமிகளைத் திருமணம் செய்தது தொடர்பாக ஏழு பேர் கைதாகி உள்ளனர்.

நெல்லையில் சிறுமிக்குத் திருமணம் நடப்பதை அறிந்து, அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், மணமகன் மற்றும் அவரது பெற்றோர் உட்பட ஐந்து பேர் கைதாகினர்.

இதேபோல், நெல்லையில் 16 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 23 வயது இளையர் கைதானார்.

ராசிபுரத்தில் 17 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்த 21 வயது இளையர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. குழந்தை திருமணத்துடன் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தைதிருமணம்

தொடர்புடைய செய்திகள்