கோடநாடு வழக்கு: குஜராத் தடயவியல் குழு வருகை

1 mins read
ba96da4b-81a0-45d8-a2a9-55b1632bbf66
கோடநாடு பங்களா. - படம்: ஊடகம்

திருச்சி: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தடையவியல் நிபுணர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இக்குழுவினர் திருச்சியில் முகாமிட்டு அங்குள்ள தொலைபேசி கோபுரங்கள் மூலம் பல்வேறு முக்கியமான தகவல்களைச் சேகரிக்க உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்த நாளில் அப்பகுதியில் உள்ள கைப்பேசி, தொலைபேசி கோபுரங்களில் பதிவான தொலைபேசி எண்கள் அவற்றின் கீழ் பதிவாகியுள்ள அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த நிபுணர் குழு சேகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

குறிப்புச் சொற்கள்